தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.6.12

மதுரை ஆதீன மடத்தை தமிழக அரசு மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு


மதுரை ஆதீன மடத்தையும், மதுரை ஆதீனம் அரு ணகிரிநாதரையும், தமிழக அரசு மீட்டுத்தரவேண்டு மென கோரி மதுரை ஆதீனம் மீட்புக்குழுவினர் சாகு ம் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத் த போவதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பில் மது ரை ஆதீனம் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் சோலைக்கண்ணன் தெரிவிக்கையில் நித்யானந்தா மீது கர்நாடக அரசு எடுத்துள்ள
நடவடிக்கை அம்மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி. இதேபோல் தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக சிவனடியார்கள், மடாதிபதிகள், மீட்புக்குழுவினரின் போராட்டங்கள் நடக்கின்றன. எனினும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வேதனையளிக்கிறது. அருணகிரிநாதரை நித்யானந்தா சீடர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவரை பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை. பழைய உதவியாளர்கள் யாருமே இல்லை. மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டிக் கொண்டதில் பெரும் சூழ்ச்சி இருக்கிறது. அதை அரசு வெளிக் கொண்டு வர வேண்டும்.

ஆதீன மடத்தின் அருணகிரிநாதர் உதவியாளர், அவரது உறவினர்கள், ஆதீனத்தின் முன்னாள் உதவியாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து தனித்தனி விசாரணை நடத்தினாலே இந்த மர்மம் விலகும். பெங்களூரில் குருபூஜை நடப்பதாகக் கூறி அருணகிரிநாதரை அழைத்துச் சென்று, ஏதோ செய்து பட்டாபிஷேகத்தை நடத்தி பழம்பெருமை மிக்க ஆதீனமடத்தின் பெருமையை சீர்குலைத்து விட்டார்கள்.
  
 அருணகிரிநாதர் உயிருக்கு ஆபத்திருக்கிறது.  நித்யானந்தா சீடர்கள் பிடியில் இருக்கும் அருணகிரிநாதரையும், மதுரை ஆதீனமடத்தையும் தமிழக அரசு உடனடியாக மீட்டுத்தரக் கோரி ஆதீனம் மீட்புக்குழு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வோம். இப்பிரச்னையில் அரசு தலையிடக் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம். நாளை மறுநாள் மீட்புக்குழு கூடி விவாதித்து மேலும் போராட்டங்களை அறிவிக்கும். இதற்கு முன்னதாக தமிழக அரசு நித்தியானந்தா பிடியிலிருந்து ஆதீனமடத்தை மீட்கும் அறிவிப்புகளை வெளியிடும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இன்று 3வது நாளாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 22 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆசிரமம் தமக்கு வியப்பளிப்பதாகவும், அறைக்குள் அறை என்று அடுக்ககங்கள் பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் பல இரகசிய அறைகளுக்குள் முக்கியமான சீடர்கள் மட்டுமே இதுவரை செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என சீடர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நித்தியானந்தாவின் சீடர்கள் 10 பேருக்கு ஜாமீன் கிடைத்திருந்த நிலையில் தானே முன்வந்து ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜரானார் நித்தியானந்தா. இன்று அவருடைய ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை எதிர்த்து காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப் போவதாகவும், அந்த மனுவில் நித்தியானந்தாவை தங்கள் பொறுப்பில் எடுத்து  விசாரிக்க அனுமதி கேட்கப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: