தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.6.12

ரஸ்யாவின் போர்க் கப்பல்கள் சிரியா நோக்கி..

ரஸ்யாவுக்கு சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. சிரி யாவில் உள்ள ராற்றுஸ் என்ற ரஸ்ய முகாம் அமைந் துள்ள தீவை நோக்கி இந்தப் போர்க்கப்பல்கள் நகர்வ டைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலா ந்து டெய்லி ரெலிகிராப் தகவல்களின்படி இந்த இரண் டு கப்பல்களிலும் ரஸ்யாவின் மரைன் படையினர், உலங்குவானூர்திகள் சகிதம் சென்று கொண்டிருப்ப தாகவும் தெரிவிக்கிறது. இந்தத் தீவில் உள்ள
ரஸ்ய இராணுவ முகாம், அங்குள்ள இராணுவ நிபுணர்கள், வளங்களை விரைவாக அப்புறப்படுத்த இந்தக் கப்பல்கள் செல்வதாகவும் தெரிவிக்கிறது.கடந்த வாரம் ஐ.நா விடுத்த பிரகடனத்தின்படி சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்துவிட்டதாகக் கூறியிருந்தது தெரிந்ததே. தற்போதைய நிலையில் சிரிய அதிகார வர்க்கமான ஆஸாட் றெஜீம் குடைசாயப்போவதை உணர்ந்தே ரஸ்யா இந்தக் கப்பல்களை அனுப்பியுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆஸாட்டின் வெளியேற்றத்திற்கான முதற் சமிக்ஞை ஆரம்பித்துவிட்டதாக ஐரோப்பிய நிபுணர்கள் கூறுகிறார்கள். மோசமான சிக்கலுக்குள் சிரியா மாட்டுப்பட்டால் சிரிய சர்வாதிகாரியை ஆதரிக்கும் ரஸ்யாவுக்கு பலத்த சங்கடத்தை அது ஏற்படுத்தும் என்றது தெரிந்ததே. மூழ்கப்போகும் கப்பலில் உள்ள எலிகள் எப்படியோ அதை அறிந்தது கொண்டு தப்பியோடிவிடுவதைப்போல ரஸ்ய எலிகள் தப்பியோட ஆரம்பித்துள்ளன என்பது இதன் கருத்தாகும்.

0 கருத்துகள்: