குடியரசு தலைவர் தேர்தலில் தான் போட்டியிடவில் லை என அப்துல் கலாம்உத்தியோகபூர்வமாக அறிவி த்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு குடியரசு தலைவர் தேர்தலில் போட் டியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அவர் தெ ரிவித்துள்ளார்.முன்னதாக பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, அப்துல் கலாமுடன் பேச்சுவார்த்தை நடத்தி யிருந்தார். இதன் முடிவில் அப்துல் கலாமின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தனது
முடிவு குறித்து அப்துல் கலாம் மேலும் தெரிவிக்கையில், என் மீது நம்பிக்கை வைத்த மம்தா பானர்ஜிக்கு நன்றி கூறவிரும்புகிறேன். தற்போதைய சூழ்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட எனது மனச்சாட்சி அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.இதையடுத்து அஹ்டிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் ஆதரிக்கும் பி.ஏ.சங்மாவையே தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சிகளும் ஆதரிக்குமா எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், குடியரசு தலைவர் தேர்தலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக