துபாயில் வரும் 21ம் தேதி முதல் 3 நாட்கள் இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி நடக்கிறது. இதில் இந்தியாவில் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.9 கோடி வரை விற்கப்படும் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறுகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளை பெறுவதற்கு ரியல் எஸ்டேட் அதிபர்கள் கண்காட்சி நடத்தி வருகின்றனர்.துபாயில் 10வது இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி வரும் 21ம் தேதி
முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் 70க்கும் அதிகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மன்ட்ரி டெவலப்பர்ஸ், நிர்மல் லைப் ஸ்டைல், ஹிராநந்தனி, அன்சால் ஏபிஐ, ஐயிரோ பிரைவேட் லிமிடெட், பிரிகேட் குரூப் பிளஸ் இன்வெஸ்டார்ஸ் கிளினிக் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
துபாயில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் சொத்துகள் வாங்க வசதியாக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால், முதலீட்டாளர்களை கவரும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக சுமான்சா கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த கண்காட்சியில் ரூ.8 லட்சம் முதல் ரூ.9 கோடி வரை உள்ள சொத்துகள் பற்றிய விவரங்கள் இடம்பெறுகின்றன. இதில் 300க்கும் அதிகமான திட்டங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இந்த 3 நாள் கண்காட்சியில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள், இந்தியாவில் சொத்துகள் வாங்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை, புனே, பெங்களூர், சென்னை, குர்கான், நொய்டா, கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், நிலங்கள் இந்த கண்காட்சியில் விற்கப்பட உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக