கேரள மாநில அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசக்கூடாது என்று கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அலுவலக நேரத்தில் அதிகாரிகள் தங்களது சொந்த விஷயங்களை செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால் அவர்களை அலுவலக வேலைக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் இவ்வாறு
உத்தரவிடப்பட்டு உள்ளது.
உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பொதுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், ``அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் செல்போன் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த துறைத் தலைவர்களின் பொறுப்பாகும்'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவசர காலங்களில் மட்டும் செல்போனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக