தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.6.12

ஜூலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பிரெஞ்ச் படையினர் திரும்புகின்றனர்


ஜுலை மாதம் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற் றும் தலிபான்களுடன் போராடி வரும் நேட்டோஅங்க த்தவர்களான பிரெஞ்சுப் படையினர் தாய் நாட்டுக்கு மீள உள்ளனர். இத் தகவலை சமீபத்தில் பதவியேற்ற பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே அதிரடியாக கூறியு ள்ளார். சமீப காலமாக ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினர் மீது தீவிரவாதிகளின் தாக்குத ல்கள் அதிகரித்துள்ள இவ் வேளையிலேயே அதிபர் ஹோலண்டேவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள் ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரெஞ்சுப் படையினர் பயணித்த வாகனம் ஒன்றின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப் பட்டிருந்தனர். இந்த அறிவிப்பு வெளியாகுவதற்கு உந்துதலாக நேற்று சனிக்கிழமை நிகழ்ந்த இத் தாக்குதல் கூறப்படுகின்றது.

இவ்வருடக் கடைசிக்குள் ஆப்கானிலிருந்து அனைத்து பிரெஞ்சு வீரர்களும் மீள் அழைக்கப்படுவர் எனவும் ஹோலண்டே கூறியுள்ளார். நேட்டோ படையில் மொத்தம் 3300 பிரெஞ்சு இராணுவத்தினர் உள்ளனர். இவர்களில் 2001 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 87 பேர் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டுள்ளனர்.

இச் செய்தி பிரான்ஸ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: