ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் “லே” நகரில் உள்ள கார்தூங் லா என்ற இடத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.நிலச்சரிவு ஏற்பட்ட தகவல் அறிந்ததுத் இராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை 400 பேரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இருப்பினும் இந்த நிலச்சரிவில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. |
மோசமான வானிலை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
நிலச்சரிவு ஏற்பட்ட இடம் பிரதான சுற்றுலாஸ்தளம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் நிறைய பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் பலர் மண்ணில் புதைந்து விட்டதாகவும் தெரிகிறது என்று அம்மாநிலத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக