தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.6.12

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சீல் வைத்த கர்நாடக அரசு


மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தாவி ன் தியான பீடத்தை கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்டு ள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நித்தியானந்தா மதுரை ஆதீனமாக பொருப்பேற்றதிலிருந்து பல்வேறு எதிர்ப்புக்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையி ல் கர்நாடக அரசு நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத் திற்கு சீல் வைத்துள்ளதுடன் நித்தியானந்தாவின் மே ல், புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வி சாரனை
நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் தொடர்பில் நித்தியானந்தாவின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் அவரது ஜாமினை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கூறியுள்ளார். மேலும் நித்தியானந்தாவின் மேல் கொடுக்கப்பட்டுள்ள பாலியல் புகார்கள் தொடர்பிலும், செய்தியாளர்கள் தாக்கப்பட்ட தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கர்நாடக அரசு நித்தியானந்தாவின் தியான பீடத்தை கையப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போது மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் இத்தகவலை மறுத்திருந்தார். மேலும் நித்தியானந்தாவின் தியான பீடங்கள் பெங்களூர் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்றன. இவை அவரது தனிப்பட்ட சொத்து இதில் யாரும் தலையிடயிலாது. சொத்துக்களை கையகப்படுத்த எந்த சட்டத்திலும் இடம் இல்லை, எனவும் நிருபர்களிடம் தெரிவித்திருந்தார். 

0 கருத்துகள்: