தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.6.12

கடந்த மூன்று வாரத்தில் 4.5 பில்லியன் டாலர்களை இழந்தார் சூக்கர்பேர்க்


பேஸ்புக் பங்குகளை பொது சந்தையில் விற்க தொட ங்கியதில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த மூன்றுவாரத் தில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க் இழந்துள்ளார்.  இதனால் அவருடைய சொத்து 15.5 பில்லியன் அமெரி க்க டாலர்களிலிருந்து 11 பில்லியன் அமெரிக்க டாலர் களுக்கு குறைந்துள்ளது.சமூகவலைத்தள உரிமையா ளர்களின் சொத்துக்கள் அபாரவளர்ச்சி அடைவது, ஆப த்தானது என கருதும் பொதுமக்கள் பேஸ்புக் பங்குக ளை வாங்குவதற்கு
ஆர்வம் காட்டாமையே மார்க் சூக்கர் பேர்க்கிற்கு இவ்வளவு நஷ்டம் ஏற்பட காரணமாகியுள்ளது என்கிறார்கள்.

கடந்த மூன்று வாரத்திற்கு முன்னர் பேஸ்புக் பங்கு ஒன்று, 38 அமெரிக்க டாலர்க்கு விற்கப்பட்டது. எனினும், தற்போது ஒரு பங்கின் விலை 27.10 அமெரிக்க டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. எப்படி இருப்பினும் 126 மில்லியன் பேர் இதுவரை பேஸ்புக் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதால் 4.79 மில்லியன் டாலர்களை பேஸ்புக் நிறுவனம் மீட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் இதுவரை 901 மில்லியன் பேர் அங்கத்துவம் பெற்றுள்ளனர். பேஸ்புக் நிறுவனம் தனது 337.41 பங்குகளை விற்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்தது.

0 கருத்துகள்: