சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நபர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து கொண்டே போகின்றது.போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் எடுத்த நடவடிக்கையில், இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.சிரியாவில் நிலைமையை சமாளிக்க ஐ.நா முன்னாள் பொது செயலர்
கோபி அனான், அமைதி உடன்படிக்கையை மேற்கொண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
கோபி அனான், அமைதி உடன்படிக்கையை மேற்கொண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக போராட்டக்காரர்களுக்கும், இராணுவத்துக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன் ஹவுலா நகரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
இதே போன்று கடந்த 8ஆம் திகதி ஹமா மாகாணத்தின் மசரத் அல் குபீர் என்ற கிராமத்தில், இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 20 பெண்கள், 20 குழந்தைகள் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர். இதை சர்வதேச கண்காணிப்பாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஹாம்ஸ் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இராணுவ தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக