இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் என்பவர், ரத்தக்குழாயை ஸ்டெம் செல் மூலம் தயாரித்து, 10 வயது சிறுமிக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு குடல், கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.ரத்தக்குழாய் பழுது பட்டதால், இதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஸ்வீடன் நாட்டின் கோத்தன்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் தலைமையிலான குழுவினர்,
இறந்து போன ஒருவரின் ரத்தக்குழாயை எடுத்து, சிறுமியின் எலும்புமஜ்ஜையிலிருந்து செல்களை எடுத்து, புதிய ரத்தக்குழாயை உருவாக்கினர்.
இந்த குழாயை, தற்போது சிறுமிக்கு பொருத்தி உயிரை காப்பாற்றியுள்ளனர். மருத்துவ வரலாற்றில், இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக