தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.6.12

முல்லைப் பெரியாறு அணையைத் தொடர்ந்து சிறுவாணியிலும் கை வைக்கிறது கேரளா!

பவானி ஆற்றின் துணை நதியான சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு முயற்சி மேற் கொண்டு வருகிறது. பவானி ஆற்றின் துணை நதியா ன சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கே ரள அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியா கி உள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை நகரமான கோவை மாநகரம் அதன் குடிநீர் தேவைக்காக சிறுவா ணி ஆற்று நீரையே நம்பி இருக்கிறது. கேரள அரசு இந் த அணையை கட்டினால்
சிறுவாணி ஆற்றில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு வராது. இதனால் கோவை மாநகரில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விவசாயமும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென்றால் கடைமடை பாசனப்பகுதி அமைந்துள்ள மாநிலத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதை பொருட்படுத்தாமல் புதிய தடுப்பணை கட்ட கேரள அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுப்பதற்கு சட்டப்படியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கருத்தாகும்.

0 கருத்துகள்: