தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.5.12

சச்சினுக்கும், கங்கூலிக்கும் பாரத ரத்னா விருது தரக்கூடாது: கட்ஜு!


கொல்கத்தா:சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்க வேண்டும் என்று கூறுவது நமது பண்பாடு குறைந்து விட்டதையே காட்டுகிறது என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு
கூறியுள்ளார்.கொல்கத்தாவில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு அவர்
பேசியது: சச்சினுக்கோ, சவுரவ் கங்குலிக்கோ அந்த விருதை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் இருவருக்குமே வழங்கக் கூடாது என்றே நான் சொல்வேன். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்றோருக்கு இறப்புக்குப் பின்பு கூட பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது. பெண் விடுதலைக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடிய புரட்சிக் கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமுக்கு ஏன் பாரத ரத்னா வழங்கப்படவில்லை என்று தெரியவில்லை. தமிழ்க் கவிஞர் மகாகவி சுப்ரமணிய பாரதி, சரத் சந்திர சட்டோபாத்யாய, முன்ஷி பிரேம்சந்த் ஆகியோருக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும்.
இந்தியாவின் சிறப்பம்சங்களை நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. அவர் நிறைய உருது கவிஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது கவிதைகளை ஹிந்தியில் மொழிப் பெயர்க்காதது வருத்தமளிக்கிறது. மேற்கு வங்கத்துக்கு வெளியே உள்ள மக்களால் அதை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
அதை மொழிப்பெயர்க்க உதவுமாறு முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டுள்ளேன் என்றார். நிகழ்ச்சியில் நஸ்ருல் இஸ்லாமின் மருமகள் கல்யாணி காஸிக்கு காளிதாஸ்-காலிப் சம்மான் விருதை அவர் அறிவித்தார்.

0 கருத்துகள்: