துவங்கியதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதே போன்று நீலகிரியிலும் கோடை சீசன் களைகட்டியுள்ளது.கடந்த 5ம் திகதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. 6ம் திகதி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடந்தது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாய்கள் கண்காட்சி நேற்று துவங்கியது, இன்றும், நாளையும் நடக்கிறது.
இந்நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் 11வது ரோஜா கண்காட்சி நேர்று தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான ரோஜா மலர்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு வியந்தனர். கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார்.
ரோஜா மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. தோட்டக்கலைத்துறை சார்பில் 12 ஆயிரம் ரோஜா மலர்களால் 15 அடி நீளம், 13 அடி உயரம் கொண்ட ‘பஞ்சவர்ணகிளி’ அலங்காரம், கோவை மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 7 ஆயிரம் மலர்களால் ஆன 11 அடி உயரம் கொண்ட பாண்டா கரடி, தர்மபுரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 6 அடி உயரம், 7 அடி நீளம் கொண்ட 3 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன புலி மற்றும் புலிக்குட்டி, சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 8 அடி உயர 3 ஆயிரம் மலர்களால் ஆன ஒட்டக சிவிங்கி ஆகியவை சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தின.
ரோஜா இதழ்களால் ரங்கோலி, மயில் போன்றவை வடிவமைக்கப்பட்டிருந்தன. ரோஜா மலர்களால் தயாரிக்கப்படும் அனைத்து வகை பொருட்களுடன் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு வகை நாட்டு ரோஜா மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக