தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.5.12

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க முடியாது: அமெரிக்கா


நேட்டோ படையினர் தவறுதலாக பாகிஸ்தான் ப டையினர் மீது நடத்திய தாக்குதலுக்கு மன்னிப்பு கே ட்க முடியாது, இச்சம்பவத்தை மறந்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க வேண்டும் என்று பாகிஸ்தா னுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ந வம்பர் மாதம் 26ஆம் திகதி நேட்டோ படையினர் நடத் திய விமானத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத் தைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பா கிஸ்தான் கடும்
கோபமடைந்தது.அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டங்களும் வெடித்தன. பாகிஸ்தான் அரசும், கடும் கோபமடைந்தது. இதையடுத்து நேட்டோ படையினருக்கான வழிகளை அது மூடியது. மேலும் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.
ஆனால் இதுவரை அமெரிக்கா மன்னிப்பெல்லாம் கேட்கவேயில்லை. மாறாக வருத்தம் மட்டுமே தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சமீபத்தில் சிகாகோவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரியை சந்திக்க மறுத்தார்.
இந்நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என்று மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், இதில் புதிதாக கூற எதுவும் இல்லை. ஏற்கனவே நாங்கள் அந்த சம்பவத்துக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து விட்டோம்.
விசாரணை தொடர்பான விவரங்களையும் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளோம். எனவே மன்னிப்பு கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்வதைப் பற்றி மட்டுமே தற்போது யோசிக்க வேண்டும்.
அந்த குறிப்பிட்ட சம்பவத்திலேயே நாம் நின்றிருப்பது தவறானது, அவசியமற்றது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்று நாங்கள் பாகிஸ்தானியர்களுக்கு உறுதியளித்துள்ளோம். பாகிஸ்தானின் இறையாண்மையை மதிப்போம் என்று கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சிகாகோவில் ஸர்தாரியை ஒபாமா அவமதித்து விட்டாரே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், உண்மையில் ஒபாமா மற்றும் ஸர்தாரிக்கு இடையே எந்தவிதமான கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவே இல்லை. பிறகு எப்படி அவமதிப்பு என்ற வார்த்தை எழ முடியும் என்று திருப்பிக் கேட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாகத்தான் இந்த மாநாடே நடந்தது. எனவே ஆப்கான் ஜனாதிபதி கர்ஸாயை மட்டுமே ஜனாதிபதி ஒபாமா சந்தித்தார். வேறு யாரையும் அவர் சந்தித்துப் பேசவில்லை என்றார்.

0 கருத்துகள்: