தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.5.12

அலகாபாத்தில் குண்டுவெடித்தது ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் நாசவேலையா?


உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அலகாபாத்தில் உள்ள கரேலி என்ற இடத்தில் இருந்த குப்பை தொட்டியில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று இருந்துள்ளது.இந்நிலையில் குப்பை பொறுக்கும் சிறுவர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை சேகரித்த போது அந்த குண்டு வெடித்திருக்கிறது.இந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்களும்
பலியாகினர். அந்த வழியே சென்று கொண்டிருந்த 16 பேர் காயமடைந்துள்ளனர்.



குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்ட பொலிஸார் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.


இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிஸார் வெடிகுண்டு இங்கே எப்படி வந்தது? யார் வைத்தது? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும், இது ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் நாசவேலையா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்: