தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.5.12

குஜராத் இனப்படுகொலை:மோடிக்கு எதிரான எஸ்.ஐ.டியின் முதல் கட்ட அறிக்கை


புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் நரேந்திரமோடியை குற்றவாளியாக சேர்க்க இயலாது என்று கூறும் எஸ்.ஐ.டியின் இறுதி அறிக்கை, 2 ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பித்த முதல் கட்ட அறிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது.கோத்ரா சம்பவத்திற்கு பழிவாங்க ஹிந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்று மோடி பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு
பிறப்பித்தார்.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 அதிகாரிகளுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் உயர் பதவி வழங்கப்பட்டது. ஆகையால், அவர்கள் மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கமாட்டார்கள் என்று எஸ்.ஐ.டி தாக்கல் செய்த முதல் கட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
தற்பொழுது எஸ்.ஐ.டிக்கு தலைமை வகிக்கும் ஆர்.கே.ராகவன், முதல் கட்ட அறிக்கையை 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழிந்தபொழுது முன்னர் தாக்கல் செய்த அறிக்கைக்கு முற்றிலும் முரணான முறையில் மோடியை முற்றிலும் வழக்கில் இருந்து விடுவிக்கும் வகையில் எஸ்.ஐ.டி இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இனப்படுகொலை நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிடவில்லை என்று மோடி, 2010 மார்ச் 27,28 தேதிகளில் நடந்த விசாரணையில் ஒப்புக்கொண்டதாக ஆர்.கே.ராகவனின் முதல் கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோத்ரா சம்பவம் நிகழ்ந்தபொழுது அங்கு சென்று பார்வையிட்ட குஜராத் மாநில முதல்வரான மோடி, அதன் பிறகு இனப்படுகொலையில் முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடவில்லை என்று எஸ்.ஐ.டியின் முதல் கட்ட அறிக்கை கூறுகிறது.
ஆனால், தற்பொழுது இறுதிக்கட்ட அறிக்கையில் இவ்விவகாரத்திலும் கூட எஸ்.ஐ.டி, மோடியை பாதுகாக்க முயலுகிறது. இனப்படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்களுக்கு போதிய சிகிட்சை மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டதால் மோடி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடவில்லை என்று எஸ்.ஐ.டி கண்டுபிடித்துள்ளதாம். இதில் முதல்வரான மோடி எவ்வித பாரபட்சமும் காண்பிக்கவில்லை என்று எஸ்.ஐ.டி தனது இறுதி அறிக்கையில் கூறுகிறது.
குஜராத் இனப்படுகொலை நடந்த வேளையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் போலீஸாரை இயக்கியதாக எஸ்.ஐ.டியின் முதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற போதிலும், சந்தேகிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறது அந்த அறிக்கை.
2002 மார்ச் மாதம் 1-ஆம் தேதி ஸீ டிவியில் மோடி அளித்த நேர்முகம், வன்முறையாளர்களுக்கு ஊக்கம் அளித்தது என்று முதல் கட்ட அறிக்கையில் கூறிய எஸ்.ஐ.டி, தற்பொழுது இறுதி அறிக்கையில் அவையெல்லாம் மோடி மீது வழக்கு தொடர காரணமாக ஆகாது என கருதுகிறது.
News@thoothu

0 கருத்துகள்: