வன்முறை காட்சிகள் அடங்கிய தொலைக்காட்சி தொடர்களை தடை செய்ய வேண்டும் என மலேசிய நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில் 28 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களும் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கின்றனர்.இதுகுறித்து மலேசியாவின் பினாங்கு பகுதி நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி என்.வி.சுப்பாராவ் கூறியதாவது, தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களில், பெரும்பாலும்
வன்முறை காட்சிகள் தான் இடம் பெறுகின்றன. இதை பார்க்கும் இளைஞர்கள் கிரிமினல்களாக மாறும் நிலை உள்ளது.
வன்முறை காட்சிகள் தான் இடம் பெறுகின்றன. இதை பார்க்கும் இளைஞர்கள் கிரிமினல்களாக மாறும் நிலை உள்ளது.
அதுமட்டுமல்லாது பெண்களும் குடும்பத்தை கவனிக்காமல் தொலைக்காட்சி பார்ப்பதில் பொழுதை கழிக்கின்றனர். எனவே தொலைக்காட்சி தொடர்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். வன்முறை காட்சிகள் அடங்கிய தொடர்களை அரசு தணிக்கை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக