மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதலில் தேசிய நெடுஞ்சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மெக்சிகோ நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருப்பது போதை மருந்து கடத்தல் கும்பல்கள் தான். இவர்களால் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தின் அமெரிக்க எல்லைப்பகுதியில் மான்டெரரி நகரில் ரெய்னோசா தேசிய
நெடுஞ்சாலையில் நேற்று மாலை 49 பேரின்உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பொலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் 43 ஆண்கள், 6 பெண்கள் ஆவர். அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும், சிலரின் உடல்கள் தலை, உடல் என தனித்தனியாக வெட்டப்பட்டும் கிடந்தன.
சாலைகளில் உடல்கள் சிதறி கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இம்மாதம் முதல் வாரத்தில் தான் கெளடாலஜாரா நகரில் 23 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலம் ஒன்றில் 9 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக