சிரியாவில் நடைபெறும் போர் கொபி அனான் கால் பதித்த பின்னரும் தொடர்ந்தபடி உள்ளது, இன்றும் வடபுல சிரியா வில் மோதல்கள் நடந்தவண்ணமுள்ளன. கொபி அனான் வந்திறங்கும் தருணத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் இவர்களில் சிரியப் படைக ளே அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.மறுபுறம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவுலா நடைபெற்ற தாக்குதல் களும் 108 பேர் கொல்லப்பட்ட நிகழ்வும் தம்மால் மேற் கொள்ளப்படவில்லை
என்று சிரிய அரசு ஐ.நா பாதுகாப்பு சபைக்கு எழுதிய கடிதத்தில் அறிவித்துள்ளது
.சிரியாவில் தொழிற்படும் பயங்க ரவாத அமைப்புக்களே இந்தத் தாக்குதலை நடாத்தியதாகவும், தமக்கும் இதற்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.என்று சிரிய அரசு ஐ.நா பாதுகாப்பு சபைக்கு எழுதிய கடிதத்தில் அறிவித்துள்ளது
அதேவேளை சிரியா மீது இனிமேல் தாக்குதல் நடாத்துவதைத் தவிர வேறு வழிகள் எதுவும் கிடையாது என்று இன்று அதிகாலை அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரிய இராணுவம் பலம் மிக்கது, சிரியாவின் கட்டமைவு குழப்பமானது, நிலப்பரப்பு இலகுவாக இல்லை என்று கூறியபடி மேலை நாடுகள் போரை தாமதித்து வருகின்றன.
மேலை நாடுகள் போருக்கு போகாமல் இருப்பதற்காகக் கூறும் காரணங்கள் மிகவும் பொய்யும், பிழையும் மிக்கவை என்று டென்மார்க் அரசியல்வாதி நாஸர் காடர் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தல் முடிவடைந்த பின்னரே சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா போர்க்களத்தில் இறங்கும் அதுவரை சிரிய மக்கள் மடிவதைத் தடுக்க யாருமில்லை என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக