தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.12

பாரத ரத்னா விருதுக்கு விஸ்வநாதன் ஆனந்த்தை பரிந்துரைக்கும் AICF


ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியனாக பட் டம் சூடியுள்ள இந்திய கிராண்ட் மாஸ்டர்விஸ்வநாத ன் ஆனந்த்தை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைப்ப தற்கு அகில இந்திய செஸ் சங்கம் (AICF) தீர்மானித்து ள்ளது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7-17 வரையிலானபள்ளி மாணவர்களுக்கென பிரத்தியேக செஸ்பயிற்சிகளை பாடசாலை கல்வியில் வழங்குவதற்கு தமிழக முத ல்வர் ஜெயலலிதா தீர்மானம்
நிறைவேற்றியதற்கும் நன்றி தெரிவித்துள்ளது.மேலும்
மேற்குவங்கத்துடனான செஸ் கூட்டிணைவுக்கான அங்கீகாரத்தை இரத்து செய்து, அம்மாநிலத்திற்கென Ad-hoc குழுவொன்றை புதிதாக நியமிப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய உலக சாம்பியன் தொடருக்கான இறுதி டைபிரேக்கர் போட்டிகளில் வெற்றி பெற்றது குறித்து ஆனந்த் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில், போட்டிகளை சமநிலையில் முடிப்பதற்காக கஷ்டப்பட்டு விளையாடகூடாது என நினைத்தேன். ஆனால் அப்படித்தான் நடந்தது. மூன்றாவதும், நான்காவதும் ஆட்டங்களில் கெல்ஃபாண்ட் வெற்றி பெற நல்ல சந்தர்ப்பம் இருந்தது.

நாங்கள் டை-பிரேக்கர் சுற்றுக்கு செல்வதற்கு தான் முன்னைய போட்டிகளை சமநிலையில் முடிக்க முயற்சித்தோம் என உங்களில் சிலர் நினைத்துள்ளீர்கள். ஆனால் அது பிரச்சினையே அல்ல. டைபிரேக்கர் என முடிவாகிவிட்டால், அதனுடன் பயணிக்க வேண்டும். நான் சில விறுவிறுப்பான யோசனைகளை வைத்திருந்தேன். ஆனால் கெல்ஃபான்ட் அவற்றை முறியடித்துக்கொண்டே வந்தார். எப்படியோ இறுதியில் எல்லாம் மகிழ்வாக எனது பாதையில் முடிந்துவிட்டன என்றார்.

இப்போட்டிகளில் வென்றதன் மூலம் ஆனந்த்துக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களும், தோல்வியுற்ற ஜெல்ஃபாண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசாக கிடைத்தன.
photo: Reuters

0 கருத்துகள்: