தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.4.12

மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்


மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முன்வந்து, இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் R.V.V மற்றும் A.E ரக ஏவுகணைகளை ரஷ்ய அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரன் மலேஷியாவுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு இறுதிக்குள் முதல் தொகுதி ஏவுகணைகள் வழங்கப்படும் என்று

அந்நிறுவனத்தின் பிரதி பொதுமுகாமையாளர் நிகோலாய் டிமிடியுக் தெரிவித்துள்ளார்.
தற்போது மலேஷியாவில் நடைபெறும் பாதுகாப்பு படைகளின் ஆசிய மாநாட்டின்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
R.V.V மற்றும் A.E ரக ஏவுகணைகள் ராடர் வழிகாட்டலில் இயங்கி அதிக தூரம் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையாகும்.
கடந்த 1994ம் ஆண்டிலிருந்து இந்த ரக ஏவுகணைகள் ரஷ்யாவில் பணியாற்றி வருகின்றன.
ஆசிய பிராந்திய நாடுகள் பிற நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க ஏவுகணைப் பரிசோதனைகளையும் கொள்முதலையும் சமீபகாலமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: