பின்லேடனின் மனைவிகளையும் குழந்தைகளையும் நாடு க டத்துவது, எதிர்பாராத காரணங்களால் தாமதமாகின்றது. கடந் த புதன்கிழமை அவர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்த ப்படுவார்கள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இஸ் லாமபாத்திலுள்ள அதிகாரிகளும், பின்லேடனின் உறவினர்க ளும், இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்கிறார்கள்.பாகிஸ்தான், பின்லேடனின் மூன்று மனைவிகள், இரு மகள்க ள், மற்றும் எண்ணிக்கை தெரிவிக்கப்படாத குழந்தைகளை வீ ட்டுச் சிறையில் வைத்துள்ளது.கடந்த
மே மாதம் பின்லேடன் அமெரிக்க அதிர டிப் படையினரால் கொல்லப்பட்ட தேதியில் இருந்து, இவர்கள் பாகிஸ்தான் அரசின் தடுப்புக் காவலில்தான் உள்ளார்கள்.பின்லேடனின் மனைவிகள், மற்றும் மகள்கள் மொத்தம் 5 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த 5 பேரும், பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக வந்து தங்கியிருந்தார்கள் என்பதே குற்றச்சாட்டு.
குழந்தைகள்மீது குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. (அநேக குழந்தைகள் பாகிஸ்தானில்தான் பிறந்தவர்கள்)
கடந்த 2-ம் தேதி, இவர்களது வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 பெண்களுக்கும், 45 நாட்கள் சிறைத் தண்டனை என்பதே வழங்கப்பட்ட தீர்ப்பு. இந்த 45 நாட்களில், ஏற்கனவே இவர்கள் வீட்டுக்காவலில் இருந்த நாட்களில் குறிப்பிட்ட சதவீதம், ஏற்கனவே அனுபவிக்கப்பட்ட தண்டனையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அந்த வகையில் இவர்களின் தண்டனை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்து விட்டது.
மறுநாள் புதன்கிழமை அவர்களை பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்துவது என்று முடிவு எடுத்திருந்தார்கள். அனைவரையும் முதலில் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்துவது எனவும், அதன்பின் சவுதி அரேபியா அவர்களை என்ன செய்ய வேண்டுமோ, செய்துகொள்ளட்டும் எனவும் இஸ்லாமபாத்தில் சொன்னார்கள்.
இந்த இடத்தில்தான் சிக்கல் வந்துள்ளது.
பின்லேடனின் 3 மனைவிகளில் இருவர் சவுதி பிரஜைகள். 5 குழந்தைகளுக்கு தாயான ஒருவர் ஏமன் நாட்டவர். இவர்கள் அனைவரையுமே சவுதிக்கு அனுப்புவதையே பாகிஸ்தான் விரும்புகிறது. சவுதி, அதை விரும்பவில்லை.
சவுதிப் பிரஜைகளான இரு மனைவிகளையும், அவர்களது குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ள சவுதி அரேபியா தயாராக உள்ளது. ஆனால், “ஏமன் நாட்டு பிரஜையான மனைவியையும், 5 குழந்தைகளையும் ஏன் சவுதிக்கு அனுப்பி வைக்கிறீர்கள்?” என்று கேட்கிறது. அவர்களை ஏமன் நாட்டுக்கு அனுப்பி விடுமாறு கூறுகிறது.
பாகிஸ்தான் அரசு, ஏமன் நாட்டுடன் டீல் பண்ணுவதை ஏதோ சில காரணங்களுக்காக தவிர்க்க நினைக்கிறது.
இதையடுத்து பாகிஸ்தான், சவுதி அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை, “அனைவரையும் சவுதிக்கு அனுப்பி வைக்கிறோம். நீங்கள் ஏர்போர்ட்டில் இருந்து உடனடியாகவே ஏமன் நாட்டுக்கு அனுப்பி வைத்து விடுங்கள்”
அந்தக் கோரிக்கைக்கு இன்னமும் பதில் வந்து சேரவில்லை. அதுதான் தாமதம்.
பின்லேடனின் குடும்பத்தினரை அழைத்துக் கொள்ள சவுதி அரேபியா எந்தளவுக்கு ஆர்வம் காட்டும் என்பது தெரியவில்லை. சவுதியின் ‘டாப்மோஸ்ட்’ குடும்பம் ஒன்று பின்லேடனுக்கு மறைமுகமாக நிதியுதவி செய்தது என்ற விஷயம், அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியும். ஆனால், வெளிப்படையாக சதி எதையும் செய்ய தயாராக இருக்கவில்லை.
சவுதிப் பிரஜையான பின்லேடனின் பிரஜாவுரிமையையே 1994-ல் சவுதி அரசு பறித்துக் கொண்டது. பின்லேடனின் தீவிரவாத தொடர்புகள் அதற்கு காரணம் எனவும் பகிரங்கமாக அறிவித்திருந்தது. இதனால், பின்லேடன் குடும்பத்துக்கு வெளிப்படையாக உதவிகள் செய்ய சவுதியும் தயங்கலாம்.
பாகிஸ்தானில் உள்ள பின்லேடன் குடும்ப வக்கீல் மொஹமட் ஆமிர் கலீல், “சவுதி அரேபியாவில் இருந்து வரவேண்டிய அனுமதி இன்னமும் வந்து சேரவில்லை. அதுதான், நாடு கடத்தல் தாமதமாகின்றது. வேறு வழியில்லாவிட்டால், ஏமன் அரசிடம் கோரிக்கை விடுப்பதற்கு பாகிஸ்தான் அரசு யோசிக்கிறது” என்று இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.
பின்லேடனின் மனைவியின் சகோதரர் ஜகாரியா அல்-சாடி, “அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதாலேயே, நாடு கடத்தல் தள்ளிப்போவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அனுமதி கிடைத்த சில மணி நேரத்தில், அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என்று எமக்கு கூறப்பட்டுள்ளது” என்கிறார்.
எந்த நிமிடமும் நாடுகடத்தப்படலாம் என்பதால், தற்போது பின்லேடனின் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டுக்கு முன்னால், 24 மணி நேரமும், மீடியாக்காரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதை மீடியா கேமராக்கள் மிஸ் பண்ண விரும்பவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக