தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனான உறவு முறிந்த து ஏன் என்பது குறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.இந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்ப தாவது, நானும் முதல்வர் ஜெயலலிதாவும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம்.1988 முதல் போயஸ் தோட்டத்தில் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக் கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை.அவரும்என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அவருக்கு து ணையாக பணியாற்றி வந்தேன்.
ஆனால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் போது எனது உறவினர்கள் நண்பர்கள் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது ஜெயலலிதா (கடந்த டிசம்பர் மாதம்) நடவடிக்கை எடுத்த பின்னரே தெரியவந்தது.
உறவினர்கள் பல குழப்பங்களை உருவாக்கினர். ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது.
அவருக்கு நான் கனவிலும் துரோகம் நினைத்தது இல்லை. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் ஆவர்.
ஜெயலலிதாவுக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் உறவை துண்டித்து விட்டேன்.
எனக்கும் அவருக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும் பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.
ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன். ஏற்கனவே அவருக்கு எனது வாழ்க்கையை அர்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் முதல்வருக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக