புதுடெல்லி:இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும்
அந்த அறிக்கை கூறுகிறது.
அந்த அறிக்கை கூறுகிறது.
தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து 5,56,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,95,000 பேர் 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 2,00,000 பேர் ஆண்கள், 1,95,000 பேர் பெண்கள் ஆவர்.
ஆண்களில் புற்றுநோய் தாக்கி உயிரிழந்தவர்களில் 23 சதவீதத்தினர் வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டும், 12 சதவீதத்தினர் வயிற்றுப் புற்றுநோயாலும், 11 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
பெண்களில், கழுத்துத் தொடர்பான புற்றுநோய் தாக்கி 17 சதவீதத்தினரும், மார்பகப் புற்றுநோய் தாக்கி 10 சதவீதத்தினரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 42 சதவீத ஆண்களும், 18 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பது மற்றும் புகையிலைப் பயன்படுத்தியதால் வரும் புற்றுநோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுடையவர்கள்.
இதன் மூலம், இந்தியா புகையிலைக்கு எதிராக அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையிலும், புகையிலைப் பொருட்கள் மீது அதிகமான வரிகளை விதிக்க வேண்டிய நிலையிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
news@thoothu
0 கருத்துகள்:
கருத்துரையிடுக