சிரியாவில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் நடைபெற்ற மோதலில் நேற்று 23 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க உதவி அதிபர் நேற்று துருக்கியில் வைத்து தெரிவிக்க, பதலடியாக 23 பேரை சுட்டுத்தள்ளியது இராணுவம். அதேவேளை சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதிக்க இன்று டோகாவில் விசேட சந்திப்பு
நடைபெறுகிறது. அரபுலீக்கின் முக்கிய உறுப்பினார்கள் எடுக்கும் தீர்மானங்கள் 41 வருட சர்வாதிகார ஆட்சிக்கு புதியதோர் சவாலாக இறங்கியுள்ளது. சிரியாவில் உள்ள முக்கியமான தலைவர்கள் 17 பேர் நாட்டைவிட்டு வெளியேற முடியாது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் நெருக்கடியான இடத்திற்குள் சிரியாவை தள்ளும் மாநாடாக இது அமைவதாக தெரிவிக்கப்படுகிறது. சிரிய ஆட்சி கவிழப்போகும் நேரத்தில் ரஸ்யா தனது நவீன ஆயுதங்களை சிரியாவிற்கு விற்க ஆரம்பித்துள்ளது. இதுபோல சதாம் உசேனுக்கும் ஆயுதங்களை விற்று பின் அவரையே காட்டிக் கொடுத்த வேலையை சில நாடுகள் செய்தன. யாரை நம்பி உண்மைகளை சொன்னாரோ அவர்களே அந்த உண்மைகளை அமெரிக்கருக்கு விற்ற அவலமும் நடந்தது. இப்போது சிரியாவின் தவணை வந்துள்ளது. சற்று முன் கிடைத்த தகவல்களின்படி சிரியாவின் உளவுப்பிரிவில் ஒரு பகுதி அரசியல் இருந்து வெளியேறி எதிரணியினருடன் சேர்ந்துள்ளது. ஞாயிறு இரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் மடிந்துள்ளனர். உளவுப்பிரிவின் வெடிப்பில் இந்த மோதல் நடந்துள்ளது. அதேவேளை இராணுவத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் பிளவுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக