தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.12.11

ஜெர்மனியில் ஒரு நகரமே மனிதரற்ற வெற்றிடமானது


ஜெர்மனியின் கோப்பிளன்ஸ் நகரத்தில் வாழ்ந்த 45.000 மக்களும் இன்று ஞாயிறு அதிகாலை அந்த நகரத்தை விட்டே வெளியேறியுள்ளார்கள். முழு நகரமும் மனித நடமாட்டமே இல்லாது வெறிச்சோடிக் கிடக்கிறது. இரண்டாம் உலக யுத்த காலத்தைச் சேர்ந்த பாரிய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 1.8 தொன் எடையுள்ள இந்தக் குண்டு பிரிட்டன் படைகளால் யுத்தத்தின்போது
வீசப்பட்டுள்ளது.இதைச் சுற்றவர மேலும் பல சிறிய குண்டுகளும் இருந்துள்ளன. இந்தக் குண்டை செயல் இழக்க வைக்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன. மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையமும் வெறிச்சோடிக் கிடக்கிறது. விடயம் கேள்விப்பட்டவர்கள் நேற்று சனிக்கிழமையே தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். இன்று பி.ப15.00 மணியளவிலேயே குண்டை செயலிழக்க வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். உலக யுத்த காலத்தில் பல மில்லியன் குண்டுகள் ஜேர்மனி மீது வீசப்பட்டுள்ளன. இவற்றில் வெடிக்காத குண்டுகள் அவ்வப்போது வெடித்து மனிதப்பலி எடுப்பதும், பல குண்டுகள் கண்டெடுக்கப்பட மக்கள் தலை தெறிக்க ஓடுவதும் வழமையான நிகழ்வுகளாகும். இதுபோன்ற நிகழ்வுகள் இலங்கையிலும் வரும் ஐம்பது ஆண்டுகளுக்கு தொடரும்.

0 கருத்துகள்: