அமெரிக்கா ஆரம்பித்த இணைய வழியிலான ஒன்லைன் ஈரானிய தூதரகத்துக்கு ஈரான்தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்தது. இந்த இணைய வழித்தூதரகம் தொடங்கப்பட்ட சில மணித்தியாலங்களில், ஈரானில் அதனைப் பார்க்க முடியாதவாறு ஈரானிய அரசு அதனை முடக்கியது. இணைய
வழியூடாக ஈரானுக்குள் அமெரிக்கா நுழையும் முயற்சி என, இந்த நடவடிக்கை ஈரானிய தரப்பில் விமர்சிக்கபட்டுள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கபடுகிறது.இதனால் ஈரானுக்குள் இருந்து இவ் இணையத்தளத்தினை எவரும் பார்வையிட முடியாது போனது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. ஈரானிய மக்களின் தனிமனித உரிமையை, அந்நாட்டு அரசு தடுப்பதாகவும் தனது கண்டனத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆயினும் இவ்வாறான தடையை ஈரான் மேற்கொண்டுள்ள போதிலும், இந்த இணையத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்பும் ஈரானிய மக்கள் வேறு தளங்களினூடாக இதனைப் பார்வையிடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக