தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.12.11

தமிழகம் முழுவதும் மலையாளிகளுக்கு எதிராக போராட்டம்


இந்திய மாநிலமான தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் மலையாளிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் காரணமாக ஜோய் ஆலுக்காஸ் உட்பட பெரிய நிறுவனங்களுக்கு பலத்த காவல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுஇந்திய மாநிலமான கேரளாவில்
உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரமாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில்
போராட்டம் நடந்து வருகிறது. இதில் குமுளி மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் தமிழர்களின் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்தினர்.


இதையடுத்து இன்று(7.12.2011) தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சை, கும்பகோணம் உட்பட சில நகரங்களில் மலையாளிகளின் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மலையாளிகளுக்கு எதிராக போராட்டம் நடந்தது. சென்னை தி.நகரில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் முன்பு தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


சென்னை சைதாப்பேட்டையில் மலையாளிகளுக்குச் சொந்தமான இனிப்புக்கடை ஒன்றும் அடித்து நொறுக்கபட்டது. மேலும் கோவையிலும் தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியினர் தாக்குதல் நடத்தியதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் மலையாளிகளுக்குச் சொந்தமானக் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியினர் அடித்து நொறுக்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் மலையாளிகளுக்கு எதிரான தொடர் போராட்டங்களால் மலையாளிகள் பதட்டமடைந்துள்ளனர்.

0 கருத்துகள்: