முல்லைப்பெரியாறின் அணை நீர் மட்டத்தை குறைத்தல் தொடர்பான கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரியவருகின்றது.முல்லை பெரியாறு அணை தொடர்பில் கேரள மற்றும் தமிழகம் இரு பகுதிகளிலும் போராட்டம் வலுப்பெற்று வரும் நி லையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டுமென கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவை
விசாரணையின் பின்னர், உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
ஏ.கே ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையின் படிதான் அணை குறித்து முடிவெடுக்கப்படுமென்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள அதே நேரம், அணையின் பாதுகாப்புக்கு மத்திய படை வேண்டுமென கோரிய தமிழக அரசின் மனுவிற்கு பதில் தருமாறு மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக