இஸ்லாமாபாத், டிச.14- ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் வழியாக பெட்ரோல் மற்றும் உணவு பொ ருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நேட்டோ படை குண்டு வீசி 24 வீரர் பலியான சம்பவத் தை தொடர்ந்து எல்லைப்பகுதியில் உள்ள சில சோத னை சாவடிகளை பாகிஸ்தான் மூடி விட்டது.
இதனால் நேட்டோ படைசப்ளை வாகனங்கள் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் வழியாக செல்கிறது.
இதனால் நேட்டோ படைசப்ளை வாகனங்கள் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் வழியாக செல்கிறது.
இந்நிலையில் அவ்வழியாக எண்ணெய் ஏற்றிச் சென்ற நேட்டோ படையின் 9 டேங்கர் லாரிகளுக்கு தீவிரவாதிகள் தீவைத்தனர். இதில் 9 லாரிகளும் அடியோடு எரிந்து நாசமானது. உயிர்சேதம் எதுவும் இல்லை. இந்த சம்பவம் காரணமாக நேட்டோ வாகனங்கள் கராச்சிக்கு திரும்புகின்றன. போக்குவரத்து நெரிசலினால் ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக