பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் தனியான உறுப்புரிமை வேண்டுமென அதிபர் முகமட் அபாஸ் வழங்கிய பிரேர ணை தொடர்ந்து நாடுகளின் ஆதரவைப் பெற்று வரு கிற து. இன்று வெள்ளி ஐஸ்லாந்து பாலஸ்தீனத்தை தனி நா டாக அங்கீகரித்துள்ளது. பிரான்சிய ஏ.எப்.பீ செய்தித் தாப னம் நடாத்திய கணிப்பீட்டின்படி இதுவரை மொத்தம் 112 நாடுகள் பாலஸ்தீனம் தனியரசாவதற்கான ஆதரவை வழங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள
மொத்தம் 13 நாடுகளிலும் 12 நாடுகள் தமது ஆதரவை தெரிவித்துவிட்டன. அமெரிக்க ஆதரவைப் பெற்ற கொலம்பியா மட்டும் மௌனம் காத்து வருகிறது. அதுபோல மத்திய கிழக்கு நாடுகளும் ஆதரவு தெரிவித்துவிட்டன. மத்திய அமெரிக்க நாடுகளான கியூபா, கோஸ்டோரிக்கா, நிக்கராகுவா, எல் சல்வடோர் போன்ற நாடுகளும் ஆதரித்துவிட்டன. ஐரோப்பிய நாடுகள் மட்டும் அமெரிக்காவிற்கு பயந்து இதுவரை மௌனம் காத்து வருகின்றன. ஆனால் அவர்களும் பகல் வேடம் போட முடியாது ஒரு கட்டத்தில் ஆதரிக்க வேண்டிய நிலை வரும். பாலஸ்தீன தனிநாடு பிரேரணையை எந்த நாடு எதிர்க்கிறதோ அந்த நாடு சர்வதேச அரங்கில் தீண்டத்தகாத ஒரு நாடாக மாறும் அபாயம் இருப்பது கவனிக்கத்தக்கது. பாலஸ்தீன பிரேரணையின் வெற்றி இலங்கை தமிழருக்கும் தனியான நிர்வாக ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய தேவையை உருவாக்கும். தமிழர் கூட்டமைப்பு அவசரப்பட்டு அரை வேக்காட்டு தீர்வுகளுக்கு பலியாகிவிடக்கூடாது. பாலஸ்தீனர்களுக்கு என்ன வழங்கப்படுகிறதோ அதே உரிமைகள் ஈழத் தமிழினத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நியதியாகும். இதை இந்தியாவோ, சீனாவோ எதிர்க்க முடியாது. ஆகவே பாலஸ்தீனத்தில் ஏற்றப்படும் புது விளக்கு தமிழீழத்திலும் ஏற்றப்படும் நாள் வருமென்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சிங்கள மகாநாயக்க தேரர்களும், கெல உறுமயக்களும், சம்பிகக்களும் கிணற்றுத் தவளைகளாக ஓலமிட்டு ஆகப்போவது எதுவும் இல்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக