மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை மலாக்கா மாநிலப்பேரவையுடன் இணைந்து இரண்டாவது முறையாக தேசிய சமய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை மலாக்கா மாநிலப்பேரவையுடன் இணைந்து இரண்டாவது முறையாக தேசிய சமய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாடு எதிர்வரும் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை), மலாக்கா ஹங்துவா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காலை 8.00 மணி தொடக்கம் 5.00 மணி வரையில் நடைபெறும் இம்மாநாட்டை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார். இப்பயனுள்ள நிகழ்வில் பொதுமக்கள் இலவசமாகக் கலந்துக் கொள்ளலாம். 2-வது தேசிய சமய மாநாடு குறித்து மேல் விளக்கங்களைப் பெற விரும்புவோர் 06- 2329485 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். *மாநாட்டு அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக