தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.11.11

எகிப்து தலைநகரில் பாரிய கலவரம் : 2 பேர் பலி, 600 க்கு மேற்பட்டோர் படு காயம்


எகிப்தின் இராணுவ மேல் சபையிடமிருந்து நாட்டினை திரும்பவும் மக்களாட்சிக்கு கொண்டு வரும்படி வலியுறுத்தி, தலைநர் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கம் மற்றும் அலெக்ஸாண்டிரியாவில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற மோதலில், இருவர் உயிரிழந்துடன் 600 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.தஹ்ரீர் சதுக்கத்தில் நிலை
கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறும் படி பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இம்மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் போது கண்ணீர் புகை ஏவியும், பொலிஸாரின் வாகனமொன்றுக்குக்கு தீயிட்டும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய இளைஞர்கள் என்பதும், புதிய சிவில் அரசாங்கத்தில், இராணுவமே அதிக தலையீடுகளை கொண்டுள்ளது என அவர்கள் குற்றம் சுமத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும், நவம்பர் 28ம் திகதி எகிப்தின் பாராளுமன்ற தேர்தல் ஆரம்பமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்: