தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.11.11

புதிய சட்டத்தை உருவாக்கும் வரையில் இசா சட்டத்தைப் பிரயோகிக்கக் கூடாது


கோலாலம்பூர்,நவம்பர் 21- அண்மையில் சபா மாநிலத்தில் போராளிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என நம்பப்படும் 13 பேரை, அரசாங்கம் இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பில் சுஹாகாம் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளது. இசா சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அச்சட்டத்தைப் பிரயோகித்தது
ஏன் என சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையம் கேள்வியெழுப்பியுள்ளது.
கடந்த தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இசா சட்டத்தையும் ஜனநாயக முறையைப் பின்பற்றும் வகையில் அடிப்படை மனித உரிமைக்கு அங்கீகாரம் வழங்குவதாகவும் அறிவித்தார். மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையைப் பிரதமர் நிறைவேற்றியதால், அம்முடிவுக்கு பெரும் வரவேற்பு கிட்டியதாக சுஹாகாம் ஆணையத்தின் தலைவர் ஹஸ்மி ஆகாம் கூறினார்.
இசா சட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததால், அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஹஸ்மி அகாம் தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

0 கருத்துகள்: