ஐதராபாத் அருகே உள்ள விமான நிலையத்தில் துபாய் நோக்கி சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து துபாய் நோக்கி நேற்று அதிகாலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 26 சிப்பந்திகள்
மற்றும் பயணிகள் உள்பட 410 பேர் இருந்தனர்.
ஐதராபாத் அருகே வான் எல்லையில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அதிகாலை 3.40 மணி அளவில் ஐதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
இதனால், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஷம்ஷாபாத் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், துபாய் விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 80 பேர் நேற்று காலை 10.20 மணிக்கு புறப்பட்டுச் சென்ற ஐதராபாத்-துபாய் எமிரேட்ஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 320 பேர் காலை 11.20 மணி அளவில் சிறப்பு விமானம் மூலமாக துபாய் புறப்பட்டு சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக