உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அமெரிக்காவின் இலினொயிஸ் மாநிலத்தின் பிரிட்ஜெற் ஜோர்டன் என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
22 வயதான இவர் 2 அடி 3 அங்குல (69செ.மீ.) உயரமுள்ளவர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் தனது பொழுதுபோக்காக நடனம் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபாடுள்ளவராகவும் காணப்படுகின்றார்.
இவரது சகோதரரான திரு.ஜோர்டன் 3 அடி 2 அங். (95.5செ.மீ.) உயரமானவராக உள்ளார்.
இவர் கூடைப்பந்து, கராத்தே
மற்றும் ஜிம்னாஸ்ரிக் விளையாட்டுக்களில் ஆர்வங்காட்டி வருகின்றார்.இவ்விருவருமே 2012 கின்னஸ் பதிவில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக