லண்டன்,செப். 01 அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 7 பேரில் ஒருவர் 3 ஆயிரம் பேர் பலியான 9/11 தீவிரவாத தாக்குதலை அமெரிக்காவேதான் நடத்தியது என்று கருதுவதாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்த கருத்து கணிப்பில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தலா ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில் 14 சதவீத பிரித்தானியர்களும், 15 சதவீத அமெரிக்கர்களும் 9/11 தீவிரவாத தாக்குதலுக்கு பின்புலமாக அமெரிக்க நிர்வாகம் உள்ளதாக நினைக்கின்றனர் என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
அல் கொய்தாதான் 9/11 தீவிரவாத
தாக்குதலை நடத்தியது என்பது பொதுவான கருத்து. ஆனால் சிலர் இதில் அமெரிக்க அரசின் தலையீடு இருப்பதாகக் கூறுகின்றனர். அமெரிக்க அரசின் தலையீடு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது.16 முதல் 24 வயதுள்ள இளைஞர்களில் 24 சதவீதத்தினர் இந்த தாக்குதலுக்கு பின் பெரிய சதிக் கூட்டம் உள்ளது என்று நம்புகின்றனர். ஆனால் 68 சதவீதத்தினர் எந்தவித சதியும் இல்லை என்று நினைக்கின்றனர்.
"சதித்திட்ட கோப்புகள் - 10 ஆண்டுகளைத் தாண்டி" என்ற பிபிசி ஆவணப்படத்திற்காக இந்த கருத்த கணிப்பு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின் ஏதோ ரகசியம் உள்ளது என்று பலர் நம்புவது குறித்த ஆய்வு இது. தொலைபேசி மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக