சிரியாவில் அதிபர் பசீர் அல் ஆசாத் பதவி விலகக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரார்களுக்கு அல் கொய்தா தலைவர் அல் ஜவாகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக சமீபத்தில் பொறுப்பு ஏற்றுள்ள அல் ஜவாகிரி ஒரு வீடியோ கேசட்டை வெளியிட்டு இருக்கிறார். அல்கொய்தா இணையதளத்தில்
இடம்பெற்றுள்ள அந்த வீடியோ காட்சியில் அவர் கூறியிருப்பதாவது:-நீங்கள் பீரங்கிகளுக்கும் ஹெலிகாப்டர்களுக்கும் நெஞ்சை காட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கிறீர்கள். ஆசாத்தின் ஆட்சிக்காலம் முழுவதும் அமெரிக்கா அவருக்கு ஒத்துழைப்பு அளித்து வந்தது. அவரது ஆதரவாளராக இருந்தது. இப்போது உங்கள் கோபம் என்னும் பூகம்பம் காரணமாக வீழ்த்தப்பட்ட அதிபரை கண்டதும் அது உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிக்கொள்கிறது.
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்துக்கு எதிராக போர் நடத்தி வந்த அமெரிக்காவின் கூட்டாளியான ஆசாத்தை எதிர்த்து நீங்கள் போராடி வருகிறீர்கள். உங்கள் கோபம் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் எதிர்த்து திரும்பவேண்டும். அது உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுவது பொய்யானது. புனிதப்போர் பதாகையை நாங்கள் உயர்த்தி பிடிக்கும் வரை எங்கள் எழுச்சி நிற்காது என்று அமெரிக்காவிடமும், ஒபாமாவிடமும் சொல்லுங்கள் இவ்வாறு அல் ஜவாகிரி அந்த கேசட்டில் பேசி இருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக