புதுடில்லி: ஆக்ராவில் அமைந்துள்ள, மொகலாய மன்னர் ஷாஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜ்க்காக கட்டிய நினைவு சின்னம் தான் தாஜ்மஹால். இது இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் சிறந்த கட்டிட கலைக்கு உதாரணாமாக திகழ்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை தர மிக முக்கியமான காரணமாக தாஜ்மஹால் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய டெல்லி செங்கோட்டை, பதேபூர் சிக்ரி, ஜெயிப்பூர் அம்பர் போர்ட், ஹுமாயுன் டூம், இப்படி அடுக்கிகொண்டே போகலாம். இந்திய கட்டிட கலைக்கு முஸ்லிம்கள் மன்னர்களின் பங்களிப்பு போல் இது வரை யாரும் செய்ததில்லை.
இது கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-10ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-11ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக