தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.7.11

பாகிஸ்தானின் விமானதளத்தில் இருந்து வெளியேற அமெரிக்காவுக்கு உத்தரவு

இஸ்லாமாபாத், ஜூலை. 4-  பாகிஸ்தானில் உள்ள விமானதளத்தை பயன்படுத்தி தான் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தடுப்பதற்காக விமானதளத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி கட்டளையிட்டார்.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் ஷான்சி என்ற இடத்தில் உள்ள விமானதளத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்
நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் இருந்தபடி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. வடக்கு மற்றும் தெற்கு வசீரிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மற்றும் வீடுகள் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பல நேரங்களில் அப்பாவிகள் பலியாகி விடுகிறார்கள். இதனால் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கடந்த மே மாதம் 2-ந் தேதி அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உறவு கசந்து போனது. உறவு நன்றாக இருந்த போது ஷான்சி விமானதளத்தை அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்த நாட்டு அரசு விட்டது. இப்போது உறவு சீர்குலைந்து இருப்பதாலும், ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாலும் அந்த விமானதளத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேறும்படி பாகிஸ்தான் ராணுவமந்திரி சவுத்ரி அகமது முக்தார் உத்தரவிட்டு இருக்கிறார். ஷான்சி விமான தளத்தில் இனி மேலும் அமெரிக்க கொடி பறக்கக் கூடாது. இங்கு இருந்து விமானங்கள் பறக்க வேண்டுமானால், அவை பாகிஸ்தான் விமானங்களாகத்தான் இருக்க வெண்டும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
பின்லேடனை சுட்டுக் கொன்ற பிறகு, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நம்பிக்கை மிக பெரிய அளவில் குறைந்து போனது. இந்த நம்பிக்கை குறைவை களைய வேண்டுமானால் இரு நாடுகளும் உட்கார்ந்து பேசி கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் பங்கு கொண்டதற்கான செலவு தொகையை ஈடுகட்டுவதாக அமெரிக்கா சொல்லி இருந்தது. அப்படி சொல்லியபடி இழப்பீட்டு தொகை தருவதை அமெரிக்கா நிறுத்தி விட்டது. இது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை அழுத்தி கொண்டு இருக்கிறது. இவ்வாறு மந்திரி முக்தார் கூறினார்.

0 கருத்துகள்: