தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஏவுகணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏவுகணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.4.12

இந்தியாவின் அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - வெற்றி!


கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி-V ஏவுகணைச் சோதனையை இன்று காலை வெற்றிகரமாக நடத்தி இராணுவ வல்லரசு பலத்தை இந்தியா கூட்டியுள்ளது.பல கி.மீ தொலைவு சென்று தாக்குந் திறனுள்ள இந்த ஏவுகணையைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து  உலகின் பலபகுதிகளைத் தாக்க முடியும்.  குறிப்பாக, சீனா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியக் கண்டம் ஆகியவற்றை எளிதாகத் தாக்க முடியும். முன்னதாக, கடந்த ஆண்டு  நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட

14.4.12

வடகொரிய ஏவுகணை கீழே விழுந்தது


இன்று அதிகாலை ஏவப்பட்ட வடகொரிய ஏவுகணை இ ன்று அதிகாலை வடகொரிய நேரம் 07.39 நிமிடத்திற்கு ஏ வப்பட்டது. பறப்பெடுத்த ஒரு நிமிடத்தில் தரையில் வி ழுந்ததாக தென் கொரிய உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் தகவல் வெளியிட்ட வடகொரிய செய்திப் பிரிவு ராக்கட் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் இருபது துண் டுகளாக உடைந்து சிதறி தென் கொரிய தலைநகர் சி யோலுக்கு 300 கி.மீ மேற்கே கடலில் விழுந்தது.வடகொ ரிய தலைவர் கிம் இல் சுங்கின் நூற்றாண்டு

5.11.11

சீனாவின் ஏவுகணை இந்தியாவுக்கு ஆபத்து அமெரிக்கா எச்சரிக்கை


சீனாவின் 4 அணு ஆயுத ஏவுகணையால் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க விஞ்ஞானிகள் குழு சீனாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி ரகசிய ஆய்வு நடத்திய நிலையில், அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு
ஆயுதங்களை குவித்து இருப்பதாக

4.7.11

பாகிஸ்தானின் விமானதளத்தில் இருந்து வெளியேற அமெரிக்காவுக்கு உத்தரவு

இஸ்லாமாபாத், ஜூலை. 4-  பாகிஸ்தானில் உள்ள விமானதளத்தை பயன்படுத்தி தான் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தடுப்பதற்காக விமானதளத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி கட்டளையிட்டார்.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் ஷான்சி என்ற இடத்தில் உள்ள விமானதளத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்

12.2.11

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி


இஸ்லாமாபாத், பிப். 11- அணு ஆயுதங்களை தாங்கி சுமார் 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கவல்ல ஹட்ப்-7 (பாபர்) என்கிற நவீன ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை மூலம் இந்தியாவிலுள்ள இலக்குகளையும் தாக்க முடியும்.
ஏவுகணை அமைப்பின் செயல்பாட்டை மதிப்பிடுவதன் ஒரு பகுதியே இந்தச் சோதனை என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தச் சோதனை எங்கு நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தானின் முப்படை அதிகாரிகள் குழுவின் தலைவர் காலித் ஷமீம் முன்னிலையில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. நாட்டின் தாக்குதல் திறனை அதிகரிப்பதிலும், பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்த சோதனை ஒரு மைல்கல் என அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் என்று தெரிவித்த அவர், இந்த ஏவுகணைச் சோதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளையும் விஞ்ஞானிகளையும் அதிபரும், பிரதமரும் வெகுவாகப் பாராட்டினார்கள் என்றார்.
பாபர் ஏவுகணை நவீன ரக அல்லது சாதாரண வெடிபொருள்களைத் தாங்கி, மிகக் குறைந்த உயரத்தில் பறந்து சென்று, குண்டூசி முனை அளவுத் துல்லியத்துடன் இலக்கைத் தாக்கவல்லது. ராடாரின் கண்களுக்கும் இது சிக்காது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் குஷாப் என்ற இடத்தில் 4-வது அணுஉலைக்கூடம் கட்டும் பணி தொடங்கியது. இதன்காரணமாக அந்த நாடு மேலும் அதிகமான அணுஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும். இப்போதே அந்த நாட்டிடம் 100-க்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் இருக்கின்றன. இது மேலும் அதிகரிக்கும். இந்த அணுஉலைக்கூடத்தை சீனா கட்டிக்கொடுக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டு உள்ளன. குஷாப்பில் ஏற்கனவே 2 அணு உலைக்கூடங்கள் இருக்கின்றன.