கொழும்பு, ஜூலை : சீனாவின் கரன்சியை இலங்கையின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சீனா-இலங்கை இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் கரன்சி மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், கனடா, நியூஸிலாந்து, நார்வே, சிங்கப்பூர், சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் கரன்சிகள் உட்பட மொத்தம் 13 நாடுகளின் கரன்சிக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
# இந்திய அரசு தன்னுடைய சிறந்த நண்பனாக நடத்தும் இலங்கையில், இந்திய ரூபாய்க்கு அங்கீகாரம் கிடையாது. #
0 கருத்துகள்:
கருத்துரையிடுக