ஆப்கானின் கந்தஹார் நகரபிதா குலாம் ஹயிதர் ஹமீடி இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தஹாரில் உள்ள நகராட்சி மண்டபத்தில் வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர் தனது தலைப் பாகையின் உள்ளே வெடிபொருட்களை ஒளித்து வைத்திருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலிபான் அமைப்பு இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
குலாம் ஹயிதர் ஹமீடி அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டஹமீட் கர்ஸாயின் சகோதரர் அஹமட் வாலி கர்ஸாயின் இடத்தினை நிரப்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.
இதேவேளை கர்ஸாயின் பிரதான ஆலோசகரான ஜன் மொஹமட் கான் மேற்கு காபுலில் வைத்து சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
குலாம் ஹயிதர் ஹமீடி கொல்லப்பட்டுள்ளமையானது ஆப்கான் அரசின் ஸ்திரமற்ற தன்மையை காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆப்கானில் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுவரும் வரும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் அமெரிக்க படைகளுடன் நல்லுறவை பேணி வந்தவர்கள்.
எனவே இவை அனைத்தும் ஒசாமா பின்லேடன் படுகொலையின் பழிவாங்கலாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக