தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.7.11

போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்ததற்கு லிபியா கண்டனம்


போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளதற்கு லிபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடாபி தலைமையிலான லிபியா அரசின் 8 தூதர்களை பிரிட்டனில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டதோடு, போராட்டக்காரர்களின் பிரதிநிதி ஒருவர் பிரிட்டனுக்கான லிபிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் ஒரே
அரசின் அங்கீகாரம் பெற்றவர்கள் என பிரிட்டன் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பிரிட்டன் மீது லிபியா அரசு கடும் கோபமடைந்தது. இந்நிலையில் பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு லிபியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடாபியின் நிர்வாகத்தில் துணை அயலுறவுத்துறை அமைச்சராக உள்ள காலித் காலிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்ற செயல். பிரிட்டன் முடிவை நீதிமன்றம் மூலம் மாற்றுவேன் என்றார்.

0 கருத்துகள்: