தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.7.11

ராம்தேவ் உதவியாளரின் சான்றிதழ்கள் போலியானது – சி.பி.ஐ கண்டுபிடிப்பு


81477779-acharya-balkrishna
வாரணாசி:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் யோகா குருவும், ஹைடெக் உண்ணாவிரதப் பேர்வழியுமான பாபா ராம்தேவின் முதன்மை உதவியாளர் பாலகிருஷ்ணாவின் சான்றிதழ்கள் போலியானவை என சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி சம்பாதித்துள்ள பாபா ராம்தேவ் ஊழக்கு எதிராக போராடுகிறேன் என்ற பெயரில் ஹைடெக் உண்ணாவிரதப்
போராட்டத்தை டெல்லியில் அரங்கேற்றினார். பின்னர் போலீஸ் நடவடிக்கையில் டேராடூனுக்கு கொண்டுசெல்லப்பட்டார். தனது ஆசிரம தலைமையகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு இயலாமல் மருத்துவர்களின் எச்சரிக்கையால் உயிருக்கு பயந்து பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
இதற்கிடையே மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ராம்தேவின் சொத்துக்கள் மற்றும் அவரது உதவியாளர் நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிவந்த பாலகிருஷ்ணா ஆகியோர் குறித்து விசாரிக்கத் துவங்கியது.
பாலகிருஷ்ணாவின் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்த பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரித்ததில் அவை போலி என்று தெரியவந்தது.
இது குறித்து சம்பூர்ணா நந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரஜ்னிஷ் ஷுக்லா கூறகையில், “பாலாகிருஷ்ணாவின் கல்வித் தகுதி குறித்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் வந்திருந்தனர். 1991-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள உயர் நிலைக் கல்வித் தகுதியான பூர்வ் மதிமா மற்றும் 1996-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ள சமஸ்கிருத பட்டமான ஷாஸ்திரி ஆகிய இரண்டையும் பாலகிருஷ்ணா சமர்பித்திருந்தார்.
ஆனால் அத்தகைய சான்றிதழ்கள் வழங்கப்பட்ட ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. மேலும், அவர் குறிப்பிட்டுள்ள எண்கள் வேறொரு மாணவனுடையது.
இதையடுத்து தான் அவர் போலிச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளார் என்று சிபிஐ முடிவு செய்தது. பாலகிருஷ்ணாவின் சான்றிதழ்கள் போலி என்று பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துவிட்டார்,” என்றார்.

0 கருத்துகள்: