தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.7.11

மனித உரிமை போராளியை எதிர்த்த மனிதகுல விரோதிகள்!


கேரளாவின் கலாச்சார நகரமாக கருதப்படும் திருச்சூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகைத்தந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய்க்கு எதிராக பா.ஜ.கவை சார்ந்த  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சூரில் சாகித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு வருகைத்தந்தார் அருந்ததிராய். அவருக்கு எதிராக பா.ஜ.க பாசிச  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கறுத்த முகமூடி அணிந்து கொண்டு வெளியே போ (GO BACK )’ என கோஷம் எழுப்பி கொண்டு அவரை தாக்க முயற்சி செய்தனர்.
அருந்ததிராய் பேராசிரியர் ஸாரா ஜோசப்புடன் அரங்கிற்கு வரும்பொழுது பா.ஜ.கவினர்’ கஷ்மீர் இந்தியாவின் தலைப்பாகை’ என எழுதிய போர்டுகளுடன் வந்து காஷ்மீருக்கு ஆதரவு தெரிவிக்கும் அருந்ததியே வெளியேறு’ என கோஷமிட்டனர்.

இந்த ஹிந்துத்துவா பண்டாரங்கள் அருந்ததிராய் பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கிறது. அவர் உலகம் போற்றும் சிறந்த சமூக சிந்தனையாளர், மனித உரிமை ஆர்வலர். இவர்களோ உலகம் தூற்றும் ஹிட்லரின் பாசிச சிந்தனை படைத்த ஹிந்துத்துவா சிந்தனை வாதிகள். 

அருந்ததிராய் ஒரு மனித உரிமை போராளி இவர்களோ மனிதர்களை மதக்கலவரங்கள் நடத்தி வேட்டையாடும் நரபலி நாயகர்கள். சூரியனை பார்த்து நாய் குலைத்ததாம் என்ற தமிழ் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பழமொழி சொன்னா சும்மா ஏன் எதுக்கு என்று கேட்கக்கூடாது பழமொழி சொன்னா அனுபவிக்கனும். அப்படியே அனுபவிச்சி பாருங்கள் புரியும்.

0 கருத்துகள்: