ஓஸ்லோ:நார்வேயின் தலைநகரமான ஓஸ்லோவில் சனிக்கிழமை அதிகாலை நடந்த குண்டுவெடிப்புகளில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது.
ஓஸ்லோ நகரத்தின் இதய பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இரண்டாவது குண்டு ஓஸ்லோவுக்கு வெளியே ஆளுங்கட்சியான லேபர் கட்சியின் இளைஞர் முகாம் நடக்கும் இடத்தில் நடந்தது. முகாமில் 700க்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக 32 வயதான ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.ஓஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில் ஏழுபேரும், லேபர் இளைஞர் முகாம் நடந்த உட்டோயா தீவில் நடந்த குண்டுவெடிப்பில் 80 பேரும் கொல்லப்பட்டனர். 900க்கும் அதிகமான நபர்கள் நகரத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் காயமடைந்து சிகிட்சை பெற்று வருகின்றனர்.
போலீசாரால் கைதுச் செய்யப்பட்ட நபரின் சட்டையில் போலீசாரின் சின்னம் இடம் பெற்றிருந்தது. ஓஸ்லோ நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக