டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க ராம்தேவின் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக கடந்த மாதம் 4-ந்தேதி யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன்
உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அன்று நள்ளிரவு டெல்லி போலீசார் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தன. இது குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையதடுதது டெல்லி போலீஸ் பதில் அளித்தனர். அதில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டிருந்தது. அந்த மைதானத்தில் யோகா பயிற்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், வேறு நோக்கங்களுக்கான கூட்டங்களுக்கு தடை அமலில் இருந்ததாகவும் கூறியது. இந்நிலையில் பி.சதாசிவம் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகிய நீதிபதிகள் அடக்கிய கோடை கால அமர்வு பாபா ராம்தேவை சார்ந்த பாரத் சுவாபிமான் அறகட்டளைக்கு டெல்லி போலீசார் கூறிய விளக்கத்திற்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணை ஜூலை 11-ந் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக