சென்னை, ஜூன். 21- சென்னையில் இன்று முதல் சுழற்சி முறையில் 4 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து வட சென்னையில் உள்ள வல்லூரில் 500 மெகாவாட் மின்திறன் கொண்ட 3 யூனிட்டுகளை அமைக்க உள்ளது. மேற்படி மின் நிலையத்தை அமைப்பதற்கு நெல்லூரில் இருந்து அல மாதிக்கு செல்லும் 400 கிலோ வோல்ட் உயர்மின் அழுத்தம் மின் பாதையில் இருந்து மின்சாரம் வழங்க இணைப்பு தர வேண்டி உள்ளது. இதற்கான வேலைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனால் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கும் மின்சாரத்தின் அளவில் சுமார் 300 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்படும். இதனால் ஏற்படும் மின் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேவைப்படும் பொழுது 4 மணி நேரத்திற்கு 1 மணி நேரம் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படும் என மின்நுகர்வோர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. சென்னைக்கு அருகாமையில் ஒரு புதிய மின்நிலையம் அமைய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு மின்நுகர்வோர்கள், ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின் தடையும் மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரம் மின்தடையும், தற்போது அமலில் உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் மின் தடையை நீக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதையொட்டி பழுதடைந்த துணை மின்நிலையங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. உயர்மின் அழுத்த
இணைப்புகளும் கூடுதலாக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கும் உயர் மின் அழுத்த மின் பாதையில் இருந்து மின்சாரம் கொண்டு வந்து 500 மெகாவாட் மின் திறன் கொண்ட 3 யூனிட் அமைக்க உள்ளனர். இந்த பணிக்காக சென்னையில் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மொத்தமாக கட் செய்யாமல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும். இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து வட சென்னையில் உள்ள வல்லூரில் 500 மெகாவாட் மின்திறன் கொண்ட 3 யூனிட்டுகளை அமைக்க உள்ளது. மேற்படி மின் நிலையத்தை அமைப்பதற்கு நெல்லூரில் இருந்து அல மாதிக்கு செல்லும் 400 கிலோ வோல்ட் உயர்மின் அழுத்தம் மின் பாதையில் இருந்து மின்சாரம் வழங்க இணைப்பு தர வேண்டி உள்ளது. இதற்கான வேலைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனால் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கும் மின்சாரத்தின் அளவில் சுமார் 300 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்படும். இதனால் ஏற்படும் மின் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேவைப்படும் பொழுது 4 மணி நேரத்திற்கு 1 மணி நேரம் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படும் என மின்நுகர்வோர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. சென்னைக்கு அருகாமையில் ஒரு புதிய மின்நிலையம் அமைய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு மின்நுகர்வோர்கள், ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக